(எம்.ஏ.ஏ.அக்தார்)
இளைஞர் கழக புதிய வாக்காளர்களுக்கான அறிவூட்டும் நிகழ்வு கிண்ணியா விசன் மண்டபத்தில் அண்மையில் (15) நடைபெற்றது.
இதன் போது புதிதாக வாக்களிக்க தகுதி பெற்ற 50 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு வாக்களிப்பு முறை சம்பந்தமான அறிவுரைகளைப் பெற்றனர்.
இதன் போது அமைதியான தேர்தலுக்கான பிரகடனத்தில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது கையொப்பங்களை இட்டனர்.
குறித்த நிகழ்வு திருகோணமலை கெப் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ரஊப் முஹம்மத் ராபில் தலைமையீல் இடம் பெற்றது.
இந் நிகழ்வுக்கு வளவாளராக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர் (கெபே) மனாஸ் மக்கின் கலந்து கொண்டு தெளிவு படுத்தினார்.
No comments: