News Just In

9/27/2024 04:29:00 PM

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிப்பாளையத்தில் மரக்கறி லொறி விபத்து!

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிப்பாளையத்தில் மரக்கறி லொறி விபத்து



(அஸ்ஹர் இப்றாஹிம்)
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று, களவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிப்பாளையம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வலது பக்கமாக விலகி தொலைபேசிக் கம்பத்தில் மோதியதில் நேற்று (26) விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகனம் சேதமடைந்துள்ளதுடன் எவருக்கும் காயமேதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments: