எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் றவூப் ஹக்கீம் நிற்கும் அணி படுதோல்வி அடையும் என வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீனந் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவை ஆதரித்து காத்தான்குடியில் இடம்பெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அங்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ, அமைச்சர்களான அலிஸப்ரி, அலிஸாஹிர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எம்.எம். முஷர்ரப் (அம்பாறை), இஸ்ஹாக் றஹ்மான் (அனுராதபுரம்), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எல்.எம்.என். முபீன் உட்பட இன்னும் பல அரசியல் பிரமுகர்களும் பெருமளவிலான ஆதரவாளர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு பிரதம அதிதிகள் வரிசையில் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் நஸீர் அஹமட்,
நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ வெற்றிவாகை சூடுவார் என்பது திண்ணம். அதற்குக் காரணம் றவூப் ஹக்கீம் எந்த அணியோடு ஒட்டிக் கொள்கிறாரோ அந்த அணி படுதோல்வி அடைந்ததுதான் கடந்த கால வரலாறாக உள்ளது. எனவே இம்முறையும் அவ்வாறே நிகழும்.
1988ஆம் ஆண்டு மறைந்த தலைவர் எம்எச்எம். அஷ்ரப் அவர்கள் பிறேமதாஸவை ஜனாதிபதியாக்கினார்;, அதேபோன்று 1994ஆம் ஆண்டும், 1999ஆம் ஆண்டும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை ஜனாதிபதியாக்கினார் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள்.
ஆனால், அஷ்ரப் அவர்கள் மறைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாணக்கியமற்ற தலைவராக றவூப் ஹக்கீம் பொறுப்பெடுத்துக் கொண்டதிலிருந்து இன்றுவரை உள்ள காலகட்டம் வரை இடம்பெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் றவூப் ஹக்கீம் ஆதரவளித்த அணி படுதோல்வியைத்தான் சந்தித்து வந்திருக்கின்றது.
ஈராயிரத்து ஐந்தாமாண்டு மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து நின்று ஹக்கீம் பிரச்சாரம் செய்த வேளையில் மஹிந்த ராஜபக்ஷவே வெற்றி பெற்றார்.
ஈராயிரத்து ஒன்பதாம் ஆண்டு யுத்தத்தை வென்றெடுத்து சிங்கள மக்களின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ போற்றப்படுகின்ற வேளையிலே முஸ்லிம் சமூகத்துக்கு உபத்திரவம் செய்த சரத் பொன்சேகாவை முஸ்லிம் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தி சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்த றவூப் ஹக்கீம் அதிலும் தோற்றார்.
இதைவிட, றவூப் ஹக்கீம் செய்த கேவலமான துரோகம் ஒன்று உண்டு. அது என்னவென்றால், கோதபாய ராஜபக்ஷ தேர்லில் வென்றாலும் சஜித் பிறேமதாஸதான் பிரதமர் என முஸ்லிம் சமூகத்pதை நம்பவைத்து ஏமாற்றினார்.
இப்படி தூரநோக்கற்ற, சமூகத்தைப் பற்றிச் சிந்திக்காத, சாணக்கியமற்ற தலைவர்தான் இந்த றவூப் ஹக்கீம். எனவே, அவரது தலைமையின் கீழ் அவர் எடுத்த எல்லா முடிவுகளும் இந்த சமூகத்தை நிர்க்கதியாக்கியதாகத்தான் அமைந்தது என்பதை முஸ்லிம் சமூகம் வரலாற்றுப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இனியும் இந்த சாணக்கியமற்ற தலைவன் ஹக்கீமின் தீர்மானங்களை முஸ்லிம் சமூகம் நம்பி ஏமரார்ந்து விடக் கூடாது.” என்றார்.

No comments: