(அஸ்ஹர் இப்றாஹிம்)
அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஒலுவில் பஷில் லங்கா எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் (10) செவ்வாய்க்கிழமை காலை 06.15 மணியளவில் கல்முனையில் இருந்து வந்த சொகுசு பஸ் ஒலுவில் பஷில் லங்கா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தரித்து நிற்பதற்காக பாதையை கடக்க முற்பட்ட வேளை அக்கரைப்பற்றில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதன் விளைவாக ஏற்கனவே பாதை ஓரமாக தரித்து நின்ற அரைசொகுசு பஸ் மற்றும் நபர் ஒருவருடன் குறித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் ஓட்டுனரும் குறித்த நபரும் காயமடைந்த நிலையில் பொது மக்களால் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அக்கரைப்பற்று பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: