News Just In

9/18/2024 07:53:00 PM

அரியநேத்திரனுக்கு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினர் கடைமை!


அரியநேத்திரனுக்கு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினர் கடைமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு தற்போது அமைச்சரவு பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் (எம்.எஸ்.டி) இரண்டு உத்தியோகத்தர்கள் நேற்று முதல் பாதுகாப்பு வழங்கும் பணியை முன்னெடுத்துள்ளனர்.

அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் (MSD) ஒன்பது உத்தியோகத்தர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அரியநேத்திரன் இரண்டு பேரை மாத்திரம் கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: