திலீபனை மறந்த மட்டக்களப்பு தேசியவாதிகள் !

திலீபனின் 37வது நினைவு தினம், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. இன்று காலை மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரத்தில் மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.செல்வகுமார் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டன.
ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார், தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டு, திலீபனின் உருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி, அகவணக்கமும் செலுத்தினர்
No comments: