News Just In

9/09/2024 08:51:00 PM

த.பொ.வே மட்டக்களப்பில் இன்று தேர்தல் பிரசாரம்!





மட்டக்களப்புக்கு சென்ற தமிழ் பொதுவேட்பாளருக்கு, மட்டக்களப்பு மாவட்டத்தின் நுழைவாயிலான வெருகல் பாலத்திற்கு அருகே மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.பொலிகண்டி முதல் பொத்துவில் வரை தமிழ் பொதுவேட்பாளருக்காக முன்னெடுக்கப்படும் நமக்காக நாம் பிரசார பணி இன்று மட்டக்களப்பை சென்றடைந்தது.

இன்று காலை வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் மட்டக்களப்பு வெருகல் பகுதியில் மேளதாளத்துடன் பா.அரியநேத்திரன் வரவேற்கப்பட்டார். தொடர்ந்து மோட்டார் வாகன பேரணியுடன் கதிரவெளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் பொது வேட்பாளர் கதிரவெளி விக்னேஸ்வரா பாடசாலை முன்றலில் இருந்து கதிரவெளி முருகன் ஆலயம் வரை கலாசார பவனியுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு வழிபாடுகளில் ஈடுபட்ட தமிழ் பொதுவேட்பாளர் வாகரை கண்டலடி துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அங்கிருந்து நமக்காகவே நாம் தேர்தல் பிரசாரம் ஆரம்பமானது. இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபருமான உதயகுமார் பொதுவேட்டாளருக்கு பகிரங்க ஆதரவை தெரிவித்தார். பொதுவேட்பாளரை வரவேற்கும் மற்றும் பிரசார பணிகளில் தமிழ் பொதுக்கட்டமைப்பு உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கதிரவெளி, வாகரை மக்கள் என பலரும் பங்கேற்றனர்

No comments: