News Just In

9/27/2024 08:53:00 AM

மட்டக்களப்பு ஏத்தாளைக்குளக் காட்டுப் பகுதியில் தீ பரவல்

மட்டக்களப்பு ஏத்தாளைக்குளக் காட்டுப் பகுதியில் தீ பரவல்…





மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்தாளைக்குளம் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீப் பரவல் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.ஏத்தாளைக்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதியானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாகவும் பறவைகள் சரணாலயமாகவும் காணப்படுகின்றது.

இன்று அப்பகுதியில் ஏற்பட்ட தீப் பரவல் தொடர்பில் தகவலறிந்து வருகை தந்த, களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உத்தியோகத்தர்கள் தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

தீ பரவல் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.தீச்சம்பவம் தற்செயலான தீச்சம்பவமா அல்லது திட்டமிட்ட செயற்பாடுகளா என்பது தொடர்பிலான தகவல்கள் இதுவரையில் வெளியாகாத போதிலும் இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments: