(அஸ்ஹர் இப்றாஹிம்)
பெருந்தோட்ட மக்கள் தேர்தல் காலங்களில் வாக்களிப்பதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. தமக்கு வாக்களிக்கும். உரிமை இருக்கின்றது. என்பதனைக் கூட புரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் சொல்வதற்காகவே வாக்களிக்கும் நபர்களாக இருந்து வருகின்றனர்.
தனது ஒரு வாக்கு நாட்டின் தலைவரையும் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யக்கூடிய பெருமதி மிக்க வாக்கு என்பதனையும் சிந்திப்பதில்லை.
இதன் காரணமாகவே மக்கள் வாக்களிப்பதில் முன்வருவதில்லை.
இதனை கருத்திற் கொண்டு பெருந்தோட்ட கிராமிய கல்வி அபிவிருத்தி நிறூவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் தலைமையில்
வீதி நாடகங்களை பெருந்தோட்ட பகுதியில் உள்ள அனைத்து தோட்டங்களிலும் முன்னெடுத்து. வருகின்றது.
அந்த வகையில் மஸ்கெலியா ,அப்கட், பொகவந்தலாவ ,அக்கரப்பத்தனை, தலவாக்கலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் உள்ள தோட்டங்களில் வாழும் மக்களுக்கு இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் முதியோர்கள் விசேட தேவை உடையவர்கள் வெளி மாவட்டங்களில் தொழில் செய்யும் சகோதரர்கள். நோயினால் பீடிக்கப்பட்டு இருப்பவர்கள் அனைவரையும் வாக்களிப்பதை உறுதி செய்வதற்கு அனைவரும் இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
சலுகைகளுக்காக வாக்களிக்காமல் உரிமைக்காக வாக்களிப்பதன். ஊடாகவே எமது இருப்பையும் காணி உரிமை வீட்டு உரிமையை பெற்றுக் கொள்ள முடியும்.
அத்தோடு இது தொடர்பாக நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பது ஒவ்வொருவரதும் கடமையாகும்.
இதனை கருத்தில் கொண்டுதான் நிறுவனம் தற்போது மக்கள் மத்தியில் வாக்கு உரிமை என்பது தொடர்பான அறிவினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments: