News Just In

9/10/2024 04:40:00 PM

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வு



(அஸ்ஹர் இப்றாஹிம்)
2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் (09) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களில் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் பங்களிப்புகள், கடமைகள், பொறுப்புக்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு முன் பூர்த்தி செய்யப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் உதவிச் செயலாளரும் அஞ்சல் மூல வாக்கு உதவி தெரிவத்தாட்சி அலுவலருமான எஸ்.கே.டி நிரஞ்சன் அவர்களினால் இதன்போது தெளிவூட்டப்பட்டது.

இச்செயலமர்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மற்றும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வு

No comments: