News Just In

9/10/2024 04:37:00 PM

வவுனியாவில் கூடிய தமிழரசுக் கட்சியின் விசேட குழு !




தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களை ஆய்வு செய்யும் விசேட குழு வவுனியாவில் (Vavuniya) கூடியது.

குறித்த சந்திப்பானது இன்றைய தினம் (10) காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமானது.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mawai Senathiraja) தலைமையில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கத்தின் (P. Sathyalingam) வவுனியா இல்லத்தில் இடம்பெற்றது.

சுமார் மூன்று மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொதுச் செயலாளர் ப. சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், சி. ஸ்ரீதரன் மற்றும் வடமகாண சபை அவை தலைவர் சி. வி. கே. சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், மட்டக்களப்பு (Batticaloa) முன்னாள் மேயர் சரவணபவன் இன்றைய தினம் (10) கலந்துகொள்ள முடியாமையினால் ஆறு பேர் கொண்ட குழுவில் ஐந்து பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: