News Just In

9/08/2024 08:03:00 PM

நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய பாடசாலையின் 78 வது ஆண்டு நிறைவையொட்டிய நிகழ்வுகள்!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய பாடசாலையின் 78 வது ஆண்டு நிறைவையொட்டிய நிகழ்வுகள் பாடசாலையின் காசிமியா மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.ஏ.கபூர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினரும் எல்.ஓ.எல்.சி.நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய உதவி முகாமையாளருமான ஏ.எல்.எம்.பாயிஸ், பழைய மாணவர் சங்க உப தலைவரும், இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய பிரதம பொறியியலாளருமான ஏ.எம்.ஹைகல் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதன்போது 78 வது ஆண்டு நினைவாக வெளியிடப்பட்ட ஸ்டிக்கர், பேனை என்பன அதிதிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன.

No comments: