News Just In

9/04/2024 01:36:00 PM

ஏறாவூரில் 158 வது தேசிய பொலிஸ் தின நிகழ்வுகள்!

158 வது தேசிய பொலிஸ் தினத்தை முன்னிட்டு ஏறாவூரில் விஷேட துஆ பிராத்தனை.

அஸ்ஹர் இப்றாஹிம்)
இலங்கையின் 158வது தேசிய பொலிஸ் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் விஷேட துஆ பிராத்தனை நிகழ்வு கடந்த செவ்வாய்கிழமை ஏறாவூர் முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலின் தலைவர் எஸ்.எல்.எம். நழீம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஏறாவூர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் திரு.பியந்த , ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹர்சடி சில்வா உட்பட பொலிஸ் நிலையத்தின் உப பரிசோதகர்கள்,பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்,
உலமாக்கள்,பள்ளிவாசல் நிருவாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர் .

இலங்கை காவல்துறையினரின் நீண்ட ஆயுள் வேண்டியும் நாட்டுக்காக நல்ல பல சேவைகள் தொடரவும் விஷேட பிராத்தனை நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.

No comments: