News Just In

9/05/2024 02:05:00 PM

இலங்கை பாடசாலைகள் கிறிக்கட் சங்கத்தால் நடத்தப்பட்ட 15 வயதிற்குட்பட்ட கிறிக்கட் போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி கடின பந்து கிரிக்கட் அணி வெற்றி!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
இலங்கை பாடசாலைகள் கிரிக்கட் சங்கத்தினால் நடாத்தப்பட்டு வரும் 2024 ஆம் ஆண்டுக்கான 15 வயதுக்குட்பட்டோருக்கான கடின பந்து கிரிக்கட் போட்டியின் போட்டியில் ஏறாவூர் அலிகார் வித்தியாலய அணியை தோற்கடித்து காத்தான்குடி மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது.

காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
50 ஓவர்கள் கொண்ட இப்போட்டியின் முதலாவது இன்னிங்சில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரி அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 63 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய காத்தான்குடி மத்திய கல்லூரி அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 66 ஓட்டங்களை பெற்றது.

இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 1 விக்கட்டை இழந்து 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய காத்தான்குடி மத்திய கல்லூரி அணி 7 விக்கட்டுக்களை இழந்து 95 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.



No comments: