மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில், போதைப் பொருள் ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் ஐஸ் போதைப் பொருள் விற்பனையாளர்கள் என காத்தான்குடி பொலிஸ்நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்க தெரிவித்துள்ளார். 44 பேர் கசிப்பு விற்பனை, திருட்டுச் சம்பவங்கள் போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரியவருகின்றது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No comments: