News Just In

8/07/2024 08:29:00 PM

சர்ச்சையில் சிக்கிய மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலையின் ஆசிரியர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!



மட்டக்களப்பில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிள்ளையான் கட்சியின் முக்கியஸ்தரான ஆசிரியர் ஒருவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

குறித்த உத்தரவை இன்றையதினம் (07.08.2024) மட்டக்களப்பு நீதவான் பிறப்பித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கடந்த காலங்களில் பல போலி முகநூல் கணக்குகளின் மூலம் பெண்களை ஏமாற்றி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், பல தரப்பட்டவர்களையும் முகம் சுளிக்க வைக்கும் வகையிலான பதிவுகளையும் இவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

குறித்த நபர் கைது செய்யப்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: