News Just In

8/07/2024 01:24:00 PM

மட்டக்களப்பு காயன்குடா கண்ணகி வித்தியாலரம் எல்லே போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு!

கிழக்கு மாகாண மட்ட எல்லே போட்டியில் மட்டக்களப்பு, காயன்குடா கண்ணகி வித்தியாலயம் மீண்டும் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு

(அஸ்ஹர் இப்றாஹிம்)
கிழக்கு மாகாண மட்ட பெண்களுக்கான எல்லே விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு காயன்குடா கண்ணகி வித்தியாலயம் 17 : 3 எனும் ஓட்ட வித்தியாசத்தில் மண்டூர் மகா வித்தியாலயத்தை தோற்கடித்து மீண்டும் சம்பியன்களாக ஆக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இப்பாடசாலை தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாக எல்லே போட்டியில் கிழக்கு மாகாண சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இப் போட்டி திருகோணமலை கோணேஸ்வரா மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது!

இப்பாடசாலை கடந்த வருடம் நடைபெற்ற தேசிய ரீதியான போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments: