(அஸ்ஹர் இப்றாஹிம்)
கொரோனா காலத்தில் ஜனாஸாக்களை கட்டாய தகனம் செய்தமை தொடர்பாக பக்க சார்பற்ற முறையில் விசாரணை நடாத்த வேண்டும் என வலியுறுத்தி காத்தான்குடியில் கையெழுத்து பெறும் நடவடிக்கை (3) இடம் பெற்றது
தேசிய சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கையை மேற்கொண்டது
34 ஆவது வருட சுஹதாக்கள் ஞாபகார்த்த தினம் காத்தான்குடியில் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் இந்த கையெழுத்து வேட்டையும் இடம்பெற்றது
கொவிட் 19 கொரோனா தொற்று நிலவிய காலப்பகுதியில் முஸ்லிம்களுடைய ஜனாஸாக்கள் கட்டாயமாக தகனம் செய்யப்பட்டது
இது தொடர்பாக அரசாங்கம் நீதியான விசாரணை ஒன்றை நடத்தி தகனம் செய்ய காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய மகஜர் ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பதற்காக அந்த மகஜரில் கையெழுத்து பெரும் நடவடிக்கையாக இதுமேற்கொள்ளப்பட்டது
தேசிய சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் தலைவர் சட்டமாணி முகம்மட் றுஸ்வின் தலைமையில் இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை. காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் முன்பாக மேற்கொள்ளப்பட்டது
காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் மற்றும் தேசிய சுஹகாக்கள் ஞாபகார்த்த நிறுவனமும் இணைந்து ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கை அடங்கிய மகஜாரை கையளிக்க உள்ளதாக தேசிய சுஹதாக்கள் ஞாபக நிறுவனத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான சட்டமாணி முகம்மட் றுஸ்வின் தெரிவித்துள்ளார்.
No comments: