News Just In

8/13/2024 02:48:00 PM

அம்பாறை மாவ ட்டத்திலுள்ள பகுதிகளில் திடீர் மழையால் சிறுபோக நெல் அறுவடை மிகவும் பாதிப்படைந்து ள்ளது.!

பிரதான வீதியின் இருமருங்கிலும் நெல்லை உலர விடும் விவசாயிகள்



(அஸ்ஹர் இப்றாஹிம்)

அம்பாறை மாவட்டத்தில் பெய்யும் திடீர் மழையினால் சிறுபோகத்தில் அறுவடை செய்த நெல்லை உலர்த்துவதில் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

தாம் அறுவடை செய்த நெல் மழையால் ஈரமுற்ற நிலையில் அவற்றை கல்முனை - அக்கரைப்பற்று, கல்முனை - அம்பாறை பிரதான வீதியின் இரு மருங்கினையும் நெல்லை வெய்யிலில் உயர்த்துவதற்காக விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

பெரும்போகத்தின் போது ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு பரவலாக சிறுபோகத்தில் சிறந்த விளைச்சல் கிடைந்திருந்த போதிலும் இதுவரை நெல்சந்தைப்படுத்தும் சபையினால் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யாத படியால் அரிசி ஆலைகளுக்கே வழங்கி வருகின்றனர். இதனால் பாரிய நஸ்டத்தை விவசாயிகள் எதிர்நோக்கி வருகின்றனர்.

ஈரமான நெல்லை மிகக்குறைந்த விலைக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் கொள்வனவு செய்வதால் உலர வைக்கும் நடவடிகைக்களில் விவசாயிகள் ஈடுபட்ட போதிலும் இதற்காக மேலதிக பணத்தை செலவிட வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்

No comments: