News Just In

8/20/2024 02:06:00 PM

பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய கும்பாபிஷேகம்



(அஸ்ஹர் இப்றாஹிம்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற பெரிய கல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய புனராவர்த்தன பஞ்சாயத்துத் மகா கும்பிஷேகம் கடந்த திங்கட் கிழமை (19) இடம்பெற்றது.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோனறீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த மூர்த்தி குருக்கள் தலைமையில் கிரிகைகள் ஆரம்பமானது.

புண்ணியாகவாசனம், யாகபூஜை, ஹோமம், மகா பூரணககுதி நடைபெற்று வேததோஸ்திரம், நாககீதாஞ்சலி, திருமுறை பாராயணம் நடைபெற்று பிரதான கும்பங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

ஆலயத்தில் தொடர்ந்தும் மண்டலாபிஷேகம் நடைபெற்று எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சங்காபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

No comments: