News Just In

8/22/2024 08:30:00 AM

தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமை அலுவலகத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் பிரதானி மதிப்பிற்குரிய அஷ் சேக் முஃப்தி ஏ.ஜே.ஏ. ரிஷ்வி, மதிப்பிற்குரிய அஷ் சேக் அர்கம் நுரஅமித் மற்றும் கலாநிதி ஏ.ஏ.அஹமட் அஷ்வர் ஆகியோரை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார்.

நாட்டில் தற்போது நிலவுகின்ற அரசியல் நிலைமைகள் பற்றி முஃப்திமார்களுடனும் நிர்வாக மௌலவிமார்களுடனும் கலந்துரையாடிய அநுர குமார திசாநாயக்க அவர்கள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நல்லாசியையும் பெற்றுக்கொண்டார்.

இத்தருணத்தில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத்தும் இணைந்துகொண்டார்.

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

No comments: