(எம்.ஏ.ஏ.அக்தார்)
காத்தான்குடி மத்திய கல்லூரியில் "மீண்டும் பாடசாலைக்கு"( Back To School) நிகழ்வின் பிரதிபலிப்பாக பாடசாலையில் பழைய மாணவர்களினால் இடம்பெற்று வரும் பங்களிப்புகளில் ஒன்றாக பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி தரிப்பிடம் 1995 க.பொ.த.சாதாரண தர மற்றும் 1998 உயர்தர வகுப்புகளில் கல்வி கற்ற பழைய மாணவர்களின் முழுமையான அனுசரணையில் செயற்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக பாடசாலை நிருவாதத்திற்கு கையளிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் அல்ஹாஜ் எம்.ஏ.நிஹால் அஹமட் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வின் அனுசரணை வழங்கியபழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பாடசாலையில் பிரதி அதிபர்கள்,பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
No comments: