News Just In

7/31/2024 01:58:00 PM

மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் இஸ்லாமிய மதகுரு ஒருவர் கைது!




மட்டக்களப்பு - மாஞ்சோலை பிரதேசத்தில் இஸ்லாமிய மதகுரு ஒருவர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற போது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, அரலகங்வில விசேட அதிரடிப்படையினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடி, மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இஸ்லாமிய மதகுரு ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரின் மோட்டார் சைக்கிளில் இருந்து இரண்டு T.56 துப்பாக்கிகள், அறுபது தோட்டாக்கள், இரண்டு மகசீன்கள் மற்றும் ஒரு பைனாகுலர் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மன்னம்பிட்டி விசேட அதிரடிப்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இவரை கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments: