மன்னார் (Mannar) தீவின் கனிய வளங்களை அகழ்வதற்கு கடந்த 2, 3 வருடங்களாக அவுஸ்திரேலியாவை (Australia) சேர்ந்த தனியார் நிறுவனமொன்று இரகசிய நகர்வுகளை மேற்கொள்வது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் பகிரங்கப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பிலான கூட்டங்கள் தற்போது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சார்ள்ஸ் எம். பி தெரிவித்துள்ளார்.
குறித்த செய்தி தொடர்பில் எமது ஊடகபிரிவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்பின்போது அவர் இதனை கூறியுள்ளார்.
தாம் நாடாளுமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவும், அமைச்சர்களுடன் மேற்கொண்ட விசேட பேச்சுவார்த்தையின் காரணமாகவும் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
No comments: