(அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம்.ஆரிப் தலைமையில் வியாளக்கிழமை (25) இடம்பெற்ற இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி திருமதி ஏ.ஏ.மலீக் கலந்து சிறப்பித்தார்.
கெளரவ அதிதிகளில் ஒருவராக கலந்து சிறப்பித்த ஓய்வு பெற்ற அதிபரும் கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் மர்ஹும் மன்சூர் அவர்களோடு நெருங்கி பழகியவர்களில் ஒருவருமான ஏ.அப்துல் கபூர் இங்கு மர்ஹும் மன்சூர் அவர்கள் பிரதேசத்திற்கும் சமூகத்திற்கும் செய்துள்ள சேவைகளை கண் முன் கொண்டு வந்து சிறப்புரை நிகழ்த்தினார்.
வித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் ஏ.எல்.ஏ.நாபித் கெளரவ அதிதிகளில் ஒருவராக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வுகளின் இறுதியில் மர்ஹும் ஏ.ஆர்.மன்சூர் அவர்களுக்காக விசேட (துஆ) பிரார்த்தனை செய்யப்பட்டது.
இது தொடர்பாக தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இவ்வைபவத்தில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு பள்ளிவாசல் தலைவர் ஏ.ஹிபத்துல் கரீம், கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் முன்னாள் அதிபர் சட்டத்தரணி எம்.சி. ஆதம்பாவா உட்பட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
No comments: