News Just In

7/26/2024 04:03:00 PM

சுங்கவரி திணைக்களத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சோதனைகள் குறித்து கலந்துரையாடல்



(அஸ்ஹர் இப்றாஹிம்)
கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் சுங்கவரி பணிப்பாளர் நாயகம்,அகில இலங்கை நகை வியாபாரிகளின் சம்மேளன தலைவர், கல்முனை வர்த்தக சங்கத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இக்கலந்துரையாடலில் போது சுங்கவரி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் திடீர் சோதனைகளால் நகைக்கடை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும், இதனால் நகைக்கடை தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

விமான நிலையம் ஊடாகவும், துறைமுகங்கள் ஊடாகவும் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுகிறது.சுங்கவரி திணைக்களத்தினர் இவ்விரு இடங்களிலும் அவர்களது சோதனைகளை துரிதப்படுத்தினால் சட்டவிரோதமான இச்செயற்பாட்டை தடுக்க முடியும் .மாறாக தவறுகள் செய்யாத நகை கடைகளை சோதனை செய்வது ஏற்க கூடியதல்ல என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் காலங்களில் நகை கடை தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் இச்சோதனைகள் அமைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்

வருமான வரி திணைக்களத்தினர் சோதனைகள் மேற்கொள்ளும் போது முன் அறிவித்தலுடன் தகுந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஆனால் சோதனைகளில் ஈடுபட்டுள்ள சுங்கவரி திணைக்களத்தினர் சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது எவ்வித அறிவித்தலுமின்றி சோதனை மேற்கொள்வதால் நகை கடை தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே சுங்கவரி திணைக்களம் எவ்வாறான ஆவணங்கள் தேவை என்பதை அகில இலங்கை நகை வியாபாரிகளின் சம்மேளனத்திற்கு அறிவித்தால் அவர்கள் நகைக்கடை வியாபாரிகளுக்கு அறிவித்து சோதனையின் போது தேவையான ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க முடியும் என சுங்கவரி பணிப்பாளர் நாயகத்திற்கு செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

No comments: