News Just In

7/10/2024 02:05:00 PM

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த புதிய கூட்டணி



சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கூட்டணி அமைக்க, சுதந்திர மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவின் தலைமையில் இயங்கும் சுதந்திர மக்கள் காங்கிரஸ் இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்தது. இந்தநிலையில் சுதந்திர மக்கள் காங்கிரஸின் உள்ளகக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கூட்டணி அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

No comments: