News Just In

7/16/2024 06:47:00 PM

நிலவில் கண்டு பிடிக்கப்பட்ட குகை!




நிலவில் முதன்முறையாக குகை ஒன்றை விஞ்ஞானிகள்கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், இந்த குகையானது, குறைந்தது 100 மீ ஆழத்தில் இருக்குமெனவும் மனிதர்கள் வாழ பொருத்தமானதாக இருக்குமெனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியிலுள்ள(Italy) Trento பல்கலை அறிவியலாளர்களான Lorenzo Bruzzone மற்றும் Leonardo Carrer என்னும் அறிவியலாளர்கள் ரேடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தக் குகையைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

நிலத்தடியில், கண்டுபிடிக்கப்படாத மறைந்திருக்கும் நூற்றுக்கணக்கான குகைகளில் இதுவும் ஒன்று என ஆராய்சியாளர்கள் கருதுகின்றார்கள்.

மேலும், நிலவில் இதேபோல நிலப்பரப்புக்கு அடியில் நூற்றுக்கணக்கான குகைகள் இருக்கலாம் என்றும், அவற்றில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகையும் ஒன்று என்றும் அறிவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பல மில்லியன் அல்லது பில்லியன் ஆண்டுகளுக்கு முன், நிலவில் எரிமலைக்குழம்பு வெளியேறியதால் இந்த குகை உருவாகியிருக்கக்கூடும் என்றும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: