News Just In

6/20/2024 11:59:00 AM

மகிந்த கட்சிக்குள் தீவிரம் அடையும் மோதல் : வெளியேறிச் செல்லும் சிரேஷ்ட அரசியல்வாதிகள்!




எதிர்வரும் தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் மீண்டும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

முதலில் ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்சவுடன் மாத்திரம் கலந்துரையாடல் நடத்த தீர்மானிக்கப்பட்ட போதிலும் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவும், மாற்றுக் குழுக்களும் இணைந்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவுடன் எந்தவிதமான கூட்டணியையும் மேற்கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மாற்றுக் குழுக்கள் ஜனாதிபதி முன்னிலையில் பசில் ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், ஜனாதிபதியுடன் பயணம் ஒன்று இல்லை எனவும், பொதுஜன பெரமுன கொள்கைகளுக்கு எதிரான குழு ஒன்றே அவருடன் இருப்பதாகவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.​​

நாமலின் ஆட்சேபனை ஒருபுறம் வைத்துவிட்டு அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு உதவும் போது இவ்வாறு கருத்து வெளியிட்டால் மன முறிவுகள் மாத்திரமே ஏற்படும் என பசிலுடன் விவாதத்திற்கு வந்த வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மாற்றுக் குழுக்களை ஜனாதிபதி தெரிவு செய்ய வேண்டும் என மாற்றுக் குழுவின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: