News Just In

6/18/2024 06:35:00 PM

இனவாத செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை வேண்டும் ! எதிர்க்கட்சித் தலைவர்



தகனமா அடக்கமா என்ற விடயத்தை பேசும் போது, இந்நாட்டின் அரசியல் வரலாற்றில் அரசாங்கமொன்று, ஒரு இனத்தையும் ஒரு மதத்தையும் குறிவைத்து விசேட நிபுணர்கள் குழுக்களை பாயன்படுத்தி, தனது இனவாத கருத்தை இந்நாட்டு முஸ்லிம் மற்றும் இஸ்லாமிய சமூகத்தினர் மீது திணிக்கும் வெட்கக்கேடான செயலில் ஈடுபட்டது. உலக சுகாதார ஸ்தாபனம் கூட அது தவறு என்று கூறியபோதும், விசேட குழுக்களை அமைத்து இந்நாட்டு முஸ்லிம் மக்களையும் இஸ்லாமிய சமூகத்தையும் தண்டிக்க நடவடிக்கை எடுத்து செயற்பட்டனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது முஸ்லிம் மக்களின் அரசியலமைப்புச் சட்டத்தில் அவர்களது உரிமைகளைக்கூட பறிக்கும் செயலாக முன்னெடுக்கப்பட்டதால் இது அடிப்படை உரிமைகளை மீறும் ஒர் செயலாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் இச்செயற்பாட்டுக்கு எதிராக அச்சமின்றி வீதியில் இறங்கி, அப்போதைய அரசாங்கத்தின் மூர்க்கத்தனமான கொள்கையை தோற்கடித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

2019 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்ட தீவிர மதவாத மற்றும் இனவாதக் கருத்துக்களைப் பயன்படுத்தி, ஒரு சமூகத்தினரை பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் யார்? அதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

No comments: