News Just In

6/03/2024 07:20:00 PM

2024 T 20 உலகக் கிண்ணத்திற்கான சாதனை பரிசுத் தொகை அறிவிப்பு!



2024T 20 ஆடவர் உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

அதன்படி, போட்டித் தொடரில் வெற்றிப் பெறும் அணிக்கு 11.25 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசுத் தொகையை ICC அறிவித்துள்ளது, வெற்றியாளர்கள் குறைந்தபட்சம் 2.45 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவார்கள் என ஐசிசி அறிவித்துள்ளது.

இதற்கமைய,, ரி20 உலக்கிண்ணத் தொடர் வரலாற்றில் அதிகப்பட்சமான பரிசுத் தொகை இவ்வருடம் வழங்கப்படவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

இதேவேளை, போட்டித் தொடரின் இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 1.28 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாக வழங்கப்படவுள்ளது.

அதே நேரத்தில் அரையிறுதியில் தோல்வியடையும் இரு அணிகளுக்கும் தலா 787,500 அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: