News Just In

4/23/2024 06:50:00 PM

பாடசாலை விடுமுறை மற்றும் கற்றல் செயற்பாடுகள் - கல்வி அமைச்சின் அறிவிப்பு!





2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (24.4.2024) ஆரம்பமாகவுள்ளதோடு மே 06 ஆம் திகதி முடிவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாடசாலை தவணை மே மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது.

அத்தோடு நாடு முழுதும் 2023/2024 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 6 ஆம் திகதி ஆரம்பமாகி 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சைச் சீட்டுக்கள் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) குறிப்பிட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் பரீட்சை அனுமதி அட்டைகளை பாடசாலை அதிபர்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தனியார் விண்ணப்பதாரர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டைகளை தபால் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பாடசாலை அதிபர்களை கேட்டுக்கொண்டுள்ளது

No comments: