News Just In

4/27/2024 01:26:00 PM

எமது தாய்மார்கள் நாளை பற்றிய கவலையுடன் வாழ்ந்து மரணிக்கின்றனர் : .எஸ்.எம்.சபீஸ்



நூருல் ஹுதா உமர்
வருமான ஏற்றத்தாழ்வு வாழ்வியலை சிதைத்துக்கொண்டிருந்தாலும் வருமானமே இல்லாமல் நாளை என்ன செய்வது என்ற வேதனையுடன் எமது சகோதரிகள் வாழ்கையை வாழாமாலையே முடித்துவிடுகின்றனர் என அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் கிழக்கின் கேடயத்தின் தலைவருமான எஸ் எம் சபீஸ் தெரிவித்தார்

நேற்று (26) பெண்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அபிவிருத்தி அடைந்த நாடுகளில் நாளை வருமானத்துக்கு என்ன செய்வது என்ற அச்சம் மிகவும் அரிதான மட்டத்தில் காணப்படுகின்றது அம்மக்களுக்கு தேவையான வருமானத்தை ஈட்டுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் அந்நாட்டு தலைவர்கள் பாதுகாத்துவருகின்றனர். எமது நாடோ முறையான தலைவர்கள் இல்லாமையினால் இன்னமும் நம்மில் பெரும்பாலானோர் உயிர் வாழ்வதற்கே கஷ்டப்பட வேண்டிய சூழலில்தான் இருந்துகொண்டிருக்கிறோம்

குறிப்பாக நமது பிரதேசங்களில் நாளைய எமது வாழ்வாதார தேவைக்கான வருமானத்தையும் குழந்தைகளின் நிலைமையையும் சிந்தித்து வேதனைப்பட்டவர்களாகவே வாழ்ந்து மரணிக்கும் நிலையை பெரும்பாலான சகோதரிமார்கள் அனுபவிக்கின்றனர்

இவற்றுக்கெல்லாம் விடிவு வரவேண்டும்மென்றால் முதலில் நீங்கள் மாறவேண்டும். மக்களை பற்றிய நாளைய எதிர்கால சந்ததிகள் பற்றிய சிந்தனைகள் இல்லாமல் மக்களின் வாழ்வியலை பற்றி தெரியாமல் மக்களைப்பற்றி சிந்திக்காமல் தனது குடும்பத்தைப்பற்றி மாத்திரமே சிந்திப்பவர்களை நீங்கள் தெரிவு செய்துவிட்டு நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்று நினைக்க முடியாது என தெரிவித்தார்

No comments: