News Just In

4/01/2024 10:36:00 AM

கனடாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்: படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்!







கனடாவின் ரொறன்ரோ பகுதியில் வேலைவாய்ப்புகளும் சராசரி சம்பளங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் அடிப்படையில், அதிகளவு கேள்வியுடைய தொழில்களின் விபரங்கள் தொடர்பில் கனேடிய ஊடகங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ரொறன்ரோ பெரும்பாக பகுதியானது பொருளாதார செயற்பாடுகள், கலாச்சார பல்வகைமை, புத்தாக்கம் போன்ற காரணங்களினால் தொழிலாளர்களை அதிகளவில் ஈர்க்கின்றது.

அதன்படி, இவ் வருடம் ரொறன்ரோ பகுதியில் அதிகளவு கேள்வி நிலவும் பத்து தொழிற்துறைகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்போது, மொன்பொருள் பொறியியலளார் , தரவு ஆய்வாளர், தரவு விஞ்ஞானி, பதிவு செய்யப்பட்ட தாதி, நிதி ஆய்வாளர், சந்தைப்படுத்தல் முகாமையாளர், சைபர் பாதுகாப்பு ஆய்வாளர், செயற் திட்ட முகாமையாளர், மனித வள முகாமையாளர், வியாபார அபிவிருத்தி முகாமையாளர் மற்றும் மின்பொறியியலாளர் உள்ளிட்ட தொழில்களுக்கு அதிக கேள்வி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

அத்தோடு, மேற்கூறப்பட்ட தொழில்களுக்கு வருடாந்த சம்பளமாக சராசரியாக 65,000 டொலர்கள் முதல் 130,000 டொலர்கள் வரையில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த தொழில்களுக்கும் இரண்டாயிரம் முதல் ஐயாயிரம் வரையிலான வேலை வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனடாவின் வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வேலை வாய்ப்பு பெறும் நோக்கில் பலர் ரொறன்ரோவுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: