News Just In

3/27/2024 12:13:00 PM

தெற்காசியாவின் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலை திறப்பு!




தெற்காசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலையான காலி – கராப்பிட்டிய வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், இன்று (27) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் இலங்கை நட்புறவின் அடையாளமாக இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலை 6 மாடிகளைக் கொண்டுள்ளதுடன் 640 படுக்கைகள், 6 அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர சிகிச்சை பிரிவுகள், தீவிர சிகிச்சை பிரிவுகள், ஆய்வகங்கள், சிசு தீவிர சிகிச்சை பிரிவுகள், சிறப்பு குழந்தைகள் பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து நவீன வைத்திய வசதிகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: