News Just In

3/24/2024 11:51:00 AM

, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கும் வீரப்பன் மகள் வித்யா!




மக்களவை தேர்தலில், கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வீரப்பனின் மகள் வித்யா போட்டியிடுகிறார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.அதில்,40தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

20 பெண் வேட்பாளர்களில் ஒருவராக வீரப்பனின் மகன் வித்யா கிருஷ்ணகிரி தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் பாஜகவில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்.கட்சியில் சேர்ந்த சிறிது காலத்திலேயே அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேடையில் வேட்பாளராக வித்யா அறிவிக்கப்பட்ட போது, தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

அப்போது ஐயா “வனம் காக்க போராடினார்”, “இனம் காக்க நானும், என் மகளும் போராடுகிறோம்” என சீமான் தெரிவித்தார்.

No comments: