News Just In

3/26/2024 07:50:00 PM

புத்தாக்க கல்வி அறிவை அடித்தளமாகக் கொண்ட சமூகத்தை வழிநடத்துபவர்களாக எதிர்கால தலைவர்கள் வளர வேண்டும்!




நூருல் ஹுதா உமர்

சமூகமாக முன்னேற வேண்டும் என்றால் இளைஞர்கள் தொடர்ச்சியாக அறிவைப் பெருக்கிக் கொள்வதோடு ஒருமைப்பாட்டுடன் ஒன்றிணைந்து செயற்படுவதிலே தான் நாம் சமூகமாக முன்னேற முடியும் என அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயத்தின் தலைவருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்தார்

பாலமுனை பிரதேசத்தில் இருந்து கிழக்கின் கேடயத்தில் புதிய அங்கத்தவராக இணைந்து கொண்ட இளைஞர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்துரைத்த அவர்,

புத்தாக்க கல்வி அறிவை அடித்தளமாக கொண்ட சமூகமாக நாம் வளர வேண்டும். அத்துடன் ஒருமைப்பாட்டுடன் எல்லோரும் சேர்ந்து இயங்கும் முறைமைக்குள் நாம் உள்வாங்கப்படுகின்றபோது நமது சமூகம் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தினை பிரசவித்துக்கொள்ளும். அந்த முறையை கொண்டு வருவதே எங்களது முதல் பணியாகும் என்றார்.

இந்நிகழ்வில் உலமாக்கள், கிழக்கின் கேடயம் பொருளாளர் ஏ.எல்.ருஸ்தி அஹ்மத், கிழக்கின் கேடயத்தின் இணைப்பாளர் சட்டக்கல்லூரி மாணவன் முஹம்மட் அசாம், ஏ.கே. அமீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும், கிழக்கின் கேடயத்தின் ஆலோசகருமான சட்டமானி எஸ்.எம்.எம். ஹனீபா, செயற்குழு உறுப்பினர் ஏ.எல்.எம்.அர்சாத் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்

No comments: