News Just In

3/09/2024 01:54:00 PM

தொழில் வழிகாட்டுதல் மூலம் மூன்றாம் நிலைக்கல்வியை ஊக்குவித்தல்!



நூருல் ஹுதா உமர்
கல்வி அமைச்சின் திறன் அபிவிருத்தி செயற்திட்டம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க பிரிவினால் க.பொ.த சாதாரண தர பரீட்சையை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு க.பொ. த உயர்தரம் ஆரம்பிக்கும் வரையிலும், உயர்தர பரீட்சையை நிறைவு செய்து பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் காலத்திலும் அவர்களை பாடசாலையில் தக்க வைத்து தொழில் வழிகாட்டல் மூலமாக மூன்றாம் நிலைக்கல்வியை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு முதலாவது முன்னோடித்திட்டம் தெரிவு செய்யப்பட்ட கல்லூரிகளில் ஒன்றான கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) சம்பிரதாய பூர்வமாக செவ்வாய்க்கிழமை, 05, மார்ச், 2023 கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் சேர் ரசீக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி, கல்முனை வலையக்கல்வி அலுவலகம் சார்பில் ஆசிரிய ஆலோசகர் எம்.எம். சியாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்முனை பிரதேச செயலகத்தின் திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை.எம். றிபாது அவர்களினால் தொழில் வழிகாட்டல் நிகழ்வு தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதி அதிபர், ஆசிரியர்கள், பயிற்சி மாணவி என பலரும் கலந்து கொண்டனர்.

No comments: