இலங்கை தொல்பொருள் திணைக்களமானது, தமிழர்களின் அடையாளங்களை அழித்து பௌத்தமயமாக்கலை செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
விசுவமடு மகாவித்தியாலயத்தில் இன்று (14.03.2024) இடம்பெற்று வரும் விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் எந்தவித இடையூறுமின்றி பௌத்தமத வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
ஆனால், வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி அன்று நடைபெற்ற வழிபாட்டில் பக்தர்கள் அந்த பகுதியில் எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தவில்லை என்ற போதிலும் அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்
No comments: