News Just In

3/20/2024 11:07:00 AM

எங்களின் ஆராய்ச்சி கப்பலிற்கு தடை விதித்துவிட்டு ஜேர்மனியின் கப்பலிற்கு அனுமதி வழங்குவதா? இலங்கைக்கான சீன தூதரகம் போர்க்கொடி



வெளிநாட்டு ஆராய்ச்சிக்கப்பல்களிற்கு இலங்கை ஒரு வருட தடையை விதித்துள்ள நிலையில் ஜேர்மனியை சேர்ந்த ஆராய்ச்சி கப்பல் கொழும்பு துறைதுகத்திற்கு வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளி;த்துள்ளமை குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் கடும் எதிர்ப்பைவெளியிட்டுள்ளது.

ஜேர்மனியி;ன் கப்பலின் ஆராய்ச்சி கப்பலிற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிவழங்கியமை குறித்து இலங்கைக்கான சீனதூதரகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது என தெரிவித்துள்ள ஆசிய இராஜதந்திரியொருவர் அனைத்து நாடுகளினதும் ஆராய்ச்சிகப்பல்களுக்கும் அனுமதி மறுப்பது என இலங்கை தீர்மானித்திருந்தால் சீனா இந்த விடயத்தை பெரிதுபடுத்தியிருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனை சேர்ந்த ஆராய்ச்சிகப்பலிற்கு இலங்கை அனுமதி வழங்கியதை அரசாங்க வட்டாரங்கள் உறுதிசெய்துள்ளன.கொழும்பு தற்போது ஜேர்மனியின் கப்பலி;ற்கு அனுமதி வழங்கியுள்ளதால் சீனா தனது கப்பல்களிற்கும் அனுமதியை கோரும்; என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீன தூதரகத்தின் எதிர்ப்பு குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சிடமிருந்தோ சீன தூதரகத்திடமிருந்தோ கருத்துக்களை பெற முடியவில்லை என எக்கனமி நெக்ஸ்ட் தெரிவித்துள்;ளது.

No comments: