News Just In

3/05/2024 10:51:00 AM

பசில் இலங்கை திரும்பினார் : விமான நிலையத்தில் வரவேற்பு !


பல மாதங்களாக அமெரிக்காவில் தங்கியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இன்று (5) காலை 8.16 மணியளவில் Emirates Airline விமானமான EK 650 இல் இலங்கை வந்தடைந்தார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஆகியோர் விமான நிலையத்திற்குச் சென்று பசில் ராஜபக்ஷவை வரவேற்றனர்.

பின்னர் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க மற்றும் பசில் ராஜபக்ஷ மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் சிறிது நேரம் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

நாமல் ராஜபக்ஷ, சஞ்சீவ எதிரிமான்ன, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, சஹன் பிரதீப் விதான, ஜயந்த கட்டகொட, இந்திக அனுருத்த, அருந்திக பெர்னாண்டோ, திஸ்ஸகுட்டியாராச்சி மற்றும் சுமார் 25 எம்.பி.க்கள் குழுவினர் பசில் ராஜபக்சவை வரவேற்க விமான நிலையத்தில் உள்ள சிறப்பு விருந்தினர் அறைக்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது


No comments: