News Just In

3/06/2024 04:55:00 PM

அரசாங்கப் பாடசாலைகளில் தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கு “பாடசாலை உணவு நிகழ்ச்சித் திட்டம்” நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி




நாட்டின் 100 கல்வி வலயங்களுக்குக் கீழ் வரும் 7, 902 பாடசாலைகளில் கல்வி கற்கும் 1.08மில்லியன் தொகையான சகல பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கியதாக “பாடசாலைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி”த்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், ஒரு மாணவருக்காக ஒரு நாளைக்கு ஒரு உணவுக்காக 85/- ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சந்தையில் காணப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளின் அதிகரிப்பிற்கிணங்க ஒரு உணவிற்காக குறைந்தது 110/- பெறுமதியான நிதி செலவிடப்படுவதாகவும் இது தொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்காக நியமிப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் குழுவினால் அறிக்கையிடப்பட்டுள்ளது.

அவ்வாறே “பாடசாலை நிகழ்ச்சித் திட்டம்” இற்காக சேவ் த சில்ட்ரன் அமைப்பின் ஊடாக 2024ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட 917 பாடசாலைகளின் 2 இலட்சம் மாணவர்களுக்கு 03 உணவு வகைகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதற்கிணங்க, தலா ஒரு உணவுக்காக மாணவருக்கு 110/- ரூபா வரை நிதியை அதிகரிப்பதற்கும், ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான 2024ஆம் ஆண்டில் 170 பாடசாலை நாட்களுக்காக “பாடசாலை உணவ நிகழ்ச்சித் திட்டத்தை” நடைமுறைப்படத்துவதற்கு கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments: