News Just In

2/17/2024 06:20:00 PM

தமிழரசு கட்சியின் மாநாட்டு தடைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை : சாணக்கியன்




திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தில் 19 ஆம் திகதி நடக்கவிருந்த தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமைக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கிலும் புலம்பெயர் தேசத்திலும் உள்ள ஒரு சிலருக்கும் சில ஊடகங்களுக்கும் தங்களது கழிவறைகளில் தண்ணீர் வராவிட்டாலும் அதற்கு சாணக்கியனின் சதிதான் காரணம் என்றும் சாணக்கியனே அதன் பின்னணியில் இருப்பதாக கருதும் நிலையே காணப்படுவதாக கவலை தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்

No comments: