News Just In

2/12/2024 08:08:00 PM

உலகிலே மிகக்குறைந்த சம்பளம் வழங்கும் நாடு: இலங்கைக்கு எந்த இடம் தெரியுமா ?



2023ஆம் ஆண்டில் உலக நாடுகளில் அதிக மாதாந்த சம்பளம் மற்றும் குறைந்த மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்கள் இருக்கும் நாடுகள் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

குறித்த அறிக்கையை சிஈஓ வோர்ல்டு இணையதளம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வில் 105 நாடுகள் குறித்து தகவல்கள் எடுக்கப்பட்டன.
அந்த அறிக்கையின் படி, உலகில் குறைந்த சராசரி சம்பளம் பற்றிய பட்டியலில் இலங்கைக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.

இதிலே இலங்கை 105 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. அத்துடன் ஆசியக் கண்டத்தில் ஏனைய நாடுகளை விட மிகவும் குறைந்த ஊதியம் கொண்ட நாடாகவும் இலங்கை (US$ 143.46) பெயரிடப்பட்டுள்ளது.

சர்வதேச மட்டத்தில் சுவிட்சர்லாந்து கூடுதல் ஊதியம் வழங்கும் நாடாகவும் ( US$6142.1 ) ஆசியக் கண்டத்தில் சிங்கப்பூர் அதிகூடிய ஊதியம் வழங்கும் நாடாகவும் (US$4350.79) பட்டியலிடப்பட்டுள்ளது.

அதே நேரம் சர்வதேச ரீதியாக 104 நாடுகளை கொண்டு நடத்தப்பட்ட பலம்வாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை 96வது இடத்தையே பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: