News Just In

2/22/2024 08:15:00 PM

பிழையாக வழிநடத்தப்படும் மட்டக்களப்பு அரசாங்க அதிபர்: உண்மை நிலையை தெளிவுபடுத்திய ஊடகவியளார்கள்!



மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் அரசாங்க அதிபர் பிழையாக வழிநடத்தளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன

இணையவழி குற்றம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு இடம் மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பு என்பன இணைந்து நடாத்திய இணைய வழி குற்றம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பான தெளிவூட்டற் செயலமர்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (22) திகதி இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் தலைமையில் இடம் பெற்ற குறித்த செயலமர்வில் சிரேஸ்ட சட்டத்தரணியும் அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும், சமூக செயற்பாட்டாளருமான மயூரி ஜனனினால் இணைய வழி குற்றம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பாக விரிவாக தெளிவூட்டப்பட்டது.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 71 ஊடகவியலாளர்களுக்கு அறிவித்து இருந்தும் சுமார் 10 தொடக்கம் 15 ஊடகவியலாளர்களும் ஏனைய அரச அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

செயலமர்வுக்கு வருகை தந்த 71 ஊடகவியலாளர்களுக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்த நிலையில் குறித்த மண்டபத்தில் 71 ஊடகவியலாளர்கள் இல்லை என்றும் அரசாங்க அதிபரை பிழையாக வழிநடத்தப்படுகின்றதாக அங்கிருந்த ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த உண்மை நிலையை அறிந்த மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த விடயம் தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிளித்துள்ளதாக கூறப்படுகின்றது.

No comments: