மட்டக்களப்பு - போரைத்தீவு பற்று பிரதேசத்துக்குட்பட்ட திக்கோடை பகுதியில் 300 பாடசாலை மாணவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கற்றல் உபகரணம் வழங்கி வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வானது நேற்று (17.09.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது பல மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
கல்விக்கான உதவிகள்
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாணக்கியன்,
“வடக்கு - கிழக்கு புனர்வாழ்வு அமைப்பானது வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் பாரிய கல்வி சார்ந்த சேவைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
அந்த வகையில் வடக்கு - கிழக்கு புனர்வாழ்வு அமைப்புக்கு உதவியாக இருக்கும் அனைத்து அனுசரணையாளர்களுக்கும் நன்றியை மக்கள் சார்பாக தெரிவித்து கொள்கின்றேன்.
நலன் விரும்பிகள் மாணவர்களுக்கு நேரடியாக உதவி செய்ய விரும்பினால் வடக்கு - கிழக்கு புனர்வாழ்வு அமைப்பினுடாக வழங்கலாம்” என தெரிவித்துள்ளார்.
No comments: