
பெலியத்தை பகுதியில் ஐந்து பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தகுற்றச்செயலுக்காகபயன்படுத்தப்பட்டவாகனமும்கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சமன் குமார என்ற 54 வயதுடைய நபரே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகபரே குற்றச்செயலுக்காக பயன்படுத்தப்பட்ட ஜீப் ரா வாகனத்தை செலுத்தியவர் என்பதுடன் அந்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரே இந்த குற்றச்செயலை திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
No comments: