News Just In

12/27/2023 02:07:00 PM

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கில்மிஷா!




சென்னை புழலில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு கில்மிஷா  சென்று அங்கு வாழும் உறவுகளை சந்தித்துள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியைச் சேர்ந்த கில்மிஷா  எனும் சிறுமி இந்தியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற பாடல் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.

அவருக்கு பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக இங்கிருந்து கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சமடைந்த தமிழர்களில் ஒரு தொகுதியினர் சென்னையில் " இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்" தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை கில்மிஷா  தனது குடும்பத்தினருடன் சென்று முகாமில் உள்ளவர்களை சந்தித்துள்ளார்



No comments: