News Just In

7/03/2025 08:21:00 AM

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு பொலிஸாரின் எச்சரிக்கை

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு பொலிஸாரின் எச்சரிக்கை



முகநூல் பக்கத்தில் புண்படுத்தும் அல்லது தவறான மொழி பிரயோகங்களை பயன்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை கவனத்தில் கொண்டு, இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் செயல்படுத்துவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கருத்துகள் மரியாதைக்குரிய மற்றும் பொருத்தமான முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்துவதால் உங்களின் குணங்கள் மட்டுமே சேதப்படுத்தும என்பதைச் சுட்டிக்காட்டிய பொலிஸார், எதிர்காலத்தில் அத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, இலங்கை பொலிஸாரின் அதிகார பூர்வ முகநூல் பக்கத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள கண்ணியமான மொழியைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

No comments: