News Just In

12/03/2023 05:12:00 AM

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்களுக்கான சாரணர் பயிற்சி முகாம்.





நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலயத்தின் கீழ் உள்ள கல்முனை கமு/கமு/அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு நாள் சாரணர் பயிற்சி முகாம் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஆர்.எம்.நௌஸாத் அவர்களின் வழிகாட்டலில் இன்று (02) நடைபெற்றது.

பாடசாலையின் சாரணர் குழு ஆசிரியர்களும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுமான எம்.ஜே. எம். முபீத் மற்றும் ஏ.ஜே.எம்.சாபித் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமிற்கு பிரதம வளவாளர்களாக மேஜர் கே.எம்.தமிம் (CALT), உதவி மாவட்ட சாரணர் ஆணையாளர் ஐ. எல்.எம். இப்றாஹிம், உதவி மாவட்ட சாரணர் ஆணையாளர் (தொழிநுட்பம்) எம்.ஏ. சலாம் ஆகியோரும் கலந்து கொண்டனர் .

குறித்த சாரணர் பயிற்சி முகாமினை கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் யூ. எல். றியாழ், பாடசாலையின் அதிபர் எம். ஐ. அப்துல் ரஸாக் ஆகியோர் பார்வையிட்டதுடன் மாணவர்களுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


No comments: